tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பாசப்போராட்டம்: தாயிற்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரிழப்பு

Share

தென்னிலங்கையில் பாசப்போராட்டம்: தாயிற்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரிழப்பு

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை கவனிக்கவில்லை என்ற சோகத்தில் மகன் உயிர் மாய்த்த சம்பவம் பதிவாகி உள்ளது.

தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த அடுத்த நாள் தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

59 வயதான உவரகல ஜதுங்கே பந்துசேன ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ள நிலையில் 90 வயதான தாய் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.

உயிரை மாய்த்த மகன் மாத்தறை பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை உயிரை மாய்த்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்தவரின் மனைவி,

தனது கணவர் பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் திட்டியதால் மனவேதனையில் இருந்ததார்.

அவரது தாயார் தனது மகளுடன் வசித்து வந்தார். ஆனால், தனது மகளின் சித்திரவதையை தாங்க முடியாமல் இருந்தார். இதனால் தாயை தனது வீட்டிற்கு அழைத்து கவனித்துக் கொண்டார்.

எனினும் அவர் தாயை அலட்சியப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதால் மனவேதனையில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்” என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த மகன் தன் தாயை நன்றாகவே நடத்தினார் என கிராம மக்கள் தெரிவித்தனர். எனினும், தனது தாயை பந்துசேன என்ற சகோதரன் கவனிப்பதில்லை என அவரது சகோதரி கிராம அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சோகமடைந்த பந்துசேன தனது மனைவியிடம் இதனைத் தெரிவித்திருந்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் முதல் பந்துசேன வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது மருமகனும் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால், மறுநாள் காலை அவரது உடல் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மகன்களின் மரணத்தை அறிந்த தாய் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...