rtjy 316 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா

Share

கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா

கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் காரணத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அத்துடன் இரு நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டனர்.

மேலும் கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இந்தியா, கனடாவிற்கான விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது..

இதன்மூலம் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி வணிகம், மருத்துவம், உள்ளிட்டவை தொடர்பான விசா வழங்கும் சேவைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 46
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு சந்திப்பு!

தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட அதன் உயர்மட்ட...

Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதாரச் சீர்திருத்தங்களில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியமானது: ஐஎம்எஃப் பிரதிநிதிகளிடம் சபாநாயகர் உறுதி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுக் குழுப் பணிகளுக்கான ஆயத்த நடவடிக்கையாக,...

Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருவளை கடலில் 6.2 பில்லியன் ரூபா ஹெராயின் மீட்பு: 6 மீனவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

பேருவளை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 323 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் கைது...

Untitled 43
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் வளர்ச்சிக்கு உலக வங்கி பாரிய நிதியுதவி: 7% பொருளாதார வளர்ச்சியை எட்ட புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தவும், நடுத்தர காலத்தில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய...