rtjy 306 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை

Share

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை

பலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணித் தாய் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரின் குழந்தை காப்பாற்றப்பட்ட மனதை உருக்கும் சம்பவமானது தெற்கு காசா வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயின் காப்பாற்றப்பட்ட குழந்தையின் காணொளி சர்வதேச ஊடகம் ஒன்றின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த குழந்தை தெற்கு காசாவில் உள்ள நாசர் வைத்திய சாலையில் நியோ – நேட்டல் பிரிவில் ஒட்சிசன் மற்றும் பிற குழாய்களுடன் இணைக்கப்பட்டு காணப்படுகிறது.

குழந்தை தொடர்பில் வைத்தியர் கூறுகையில், குழந்தை உயிர் பிழைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இஸ்ரேலிய முற்றுகையால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாசர் வைத்தியசாலைய வளாகம் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், குழந்தையின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...