9 6 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்களின் காணொளிகளை விற்பனை செய்யும் கும்பல்

Share

சிறுவர்களின் காணொளிகளை விற்பனை செய்யும் கும்பல்

இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் பணியகம் நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் பலர் வாட்ஸ்அப் குழுவில் அங்கம் வகித்து சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வருவதாக பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2, 3, 5 மற்றும் 7வயதுக்குட்பட்ட சிறுவன் மற்று சிறுமிகளின் பாலியல் மற்றும் ஆபாச காட்சிகள் அடங்கிய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் 1000, 2000 மற்றும் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களால் ஆபாசமான காணொளிகளை பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைக்கு தேவையான பல உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பணியகம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச்...

08 20
செய்திகள்உலகம்

ஈரான் மறுப்பு: ஜனாதிபதி ட்ரம்புடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்த கருத்தை ஈரான்...

07 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச ரீதியிலான போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, நாடு...

06 19
உலகம்செய்திகள்

நியூயோர்க்கில் ஏர் கனடா விமானம் கோர விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு; பயணிகள் படுகாயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா (LaGuardia) சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா (Air...