ஆன்மீகம்

தீபாவளிக்கு இந்த ராசிக்காரர்கள் இந்த ஒரு பொருளை வாங்கினால் செல்வம் குவியுமாம்!

Share
Diwali Diya
Share

தீபாவளிக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளை வாங்கினால் செல்வம் குவியும் என்று இங்கே பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினர் தங்க காசுகள், வெள்ளி காசு போன்றவற்றை உங்களால் முடிந்த வரை வாங்கலாம். இவற்றில் முதலீடு செய்வதால் உங்களின் செல்வ நிலை உயரும்.

மேலும் இரும்பு அல்லது தோலால் ஆன பொருட்களை வாங்குவதையோ அல்லது ரசாயனங்கள் பயன்படுத்துவதையோ தவிர்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி, வைரம், வெண்கலம் போன்ற ஆபரணம், பொருட்களை அதிகம் வாங்கலாம். குங்குமம், சந்தனம் வாங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இருப்பினும், எண்ணெய், தோல், மரப் பொருட்கள் அல்லது வாகனங்களைத் தவிர்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு தந்தேராஸ் நாளானது சிறப்பான சந்தர்ப்பங்களைத் தருவதாக இருக்கும்.

அவர்களைப் பொறுத்தவரை, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது சிறந்தது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் எந்தப் பொருளையும் தங்களின் பெயரில் வாங்காமல், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கலாம். குழந்தைகளுக்கு பரிசு கொடுக்க திட்டமிடலாம். கடக ராசியினர் தங்கம் வாங்குவதையோ அல்லது பங்குச் சந்தை ஒப்பந்தங்களில் முதலீடு செய்வதையோ தவிர்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வாகனங்கள், மின்னணு சாதனங்கள், பாத்திரங்கள் வாங்கலாம். மரம், நிலம், வீடுகள், மனைகள், நகைகள், தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலமும் அவர்கள் லாபம் தேடலாம்.

இந்த நபர்கள் குறிப்பாக இரும்பு மற்றும் சிமென்ட் செய்யப்பட்ட பொருட்களால் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கன்னி

இந்த ராசிக்கு உட்பட்டவர்கள் நிலம், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கேஜெட்கள் வாங்கலாம். இருப்பினும், இந்த நபர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

​துலாம்

தாராளவாசிகளாக திகழும் துலாம் ராசியினர் பெரிய அளவில் எதையும் முதலீடு செய்வதற்கு முன் அல்லது தங்கம் மற்றும் வைரத்தில் முதலீடு செய்வதற்கு முன் சிறிது நேரம் காத்திருப்பதும், ஆலோசித்து முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.

நீங்கள் பெரிய பொருட்களில் முதலீடு செயவதைத் தவிர்த்து, உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க முயலவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு தங்கம், வெள்ளி, ஆடைகள், மண்பாண்டப் பொருட்கள் வாங்குவது மிகவும் சாதகமான பலனைத் தரும். பிராண்டட் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம்.

அதே சமயம், அதிக பணம் செலவாகக்கூடிய அல்லது சொத்து, பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசியினர் தீபாவளி பண்டிகையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிலம், விலைமதிப்பற்ற உலோகங்கள், வைரங்கள் போன்ற விஷயங்களில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் உங்களின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும்.​

மகரம்

மகர ராசியினருக்கு எதை வாங்கினாலும் அதில் லாபம் கூடும்.

அவர்கள் நிலம், பாத்திரங்கள் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் முதலீடு செய்யலாம்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டு பெரியோர், உங்களின் மூதாதையர்களின் பொருட்கள் வகையிலும் உங்களுக்கு பயனுள்ளதாக, சாதகமானதாக இருக்கும்.​

கும்பம்

உங்களுக்கு விருப்பமான புத்தகங்கள், வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மரச்சாமான்கள், வீட்டிற்கு தேவையான அழகான அலங்கார பொருட்களை வாங்குவது சிறப்பாக இருக்கும்.

கும்ப உறுப்பினர்களுக்கு உகந்த வகையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்த நல்ல நேரம் ஏற்றது. இருப்பினும் நிலையான சொத்துக்கள், பங்கு சந்தை போன்ற விஷயங்களைத் தவிக்கவும்.​

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த உலோகங்களில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும். நீங்கள் பங்குசந்தை, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
மன்னார் மடுமாதா ஆடி திருவிழா
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா!!!

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச்...

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை! பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர...

23 649aec1a6f6f2
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

வரலாற்றுச் சின்னமாகிறது மகாவம்சம்..!

இலங்கையின் மகாவம்சம் நூல், யுனெஸ்கோ அமைப்பினால் வரலாற்று சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இந்த...

download 19 1 2
ஆன்மீகம்

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்!

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்! பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது....