இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி

500x300 1780576 how to celebrate diwali

தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களும் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்ற உண்மையான வரலாறு நம்மில் பலரும் அறியாத ஒன்று.தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு மூன்று விதமான வரலாறுகள் உள்ளன. அந்த மூன்று விதமான தீபாவளி வரலாற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

இராமாயணத்தில் இராமன் ராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதை மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார்.அந்த நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த நாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்ற நாளை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

இந்த விரதம் முடிந்த அன்று தான் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவம் எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல வரலாறுகளில் நாம் கீழே பார்க்கப்போகிற இந்த மூன்றாவது வரலாறு தான் மக்களால் அதிகம் பேசக்கூடிய தீபாவளி பண்டிகை வரலாறு ஆகும்.

அதிக மக்கள் கூறும் நரகாசுரனை வதம் செய்த வரலாறு. இரண்யாட்சன் என்ற ஒரு அரக்கன் பூமாதேவியை கடத்திக் கொண்டு போய் பாதாளலோகத்தில் மறைத்து வைத்திருந்தான். தீபாவளி பண்டிகை பிறந்த கதை நரகாசுரன் தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, அவனுடைய தாய், தந்தையரிடம் ஒரு வரம் கேட்கிறான். தன்னுடைய இறப்பை துக்கமாக எடுத்துக்கொள்ளாமல் எல்லோரும் சந்தோசமாக கொண்டாடவேண்டும் என்று கேட்கிறான்.

அதனால் தீபாவளி என்ற பண்டிகை உதயமானது. இதனால் தான் நரகாசுரனின் இறப்பை, இந்துக்கள் பட்டாசு வெடித்தும், தீபம் ஏற்றியும், ரங்கோலி கோலமிட்டும், தீபாவளி வாழ்த்துகளுடனும் கொண்டாடுகிறோம். தீபாவளி அர்த்தம் தீபம் என்றால் “விளக்கு” என்று பொருள். “ஆவளி” என்றால் “வரிசை” என்று பொருள். வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

#Deepavali

Exit mobile version