ஆப்கானிஸ்தானுக்கு, மேலும் 308 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க திட்டமிடுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் முதல் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவித் தொகை 782 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது என்றும் வெள்ளை மாளிகை இன்று குறிப்பிட்டுள்ளது.
#afghanistan