கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்கொட்டித் தீர்த்துள்ளது.
கனமழை காரணமாக அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்களும் பாதிக்கபட்டுள்ளது.
வான்கூவரில் கனமழைக்கு இடையே வீசிய சூறாவளி காற்றால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு மேல் எழும்பின.
இதனால் விசை படகுகளும் பாய்மர கப்பல்களும் உடைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.
முன்பு ஏற்பட்ட காட்டுத் தீயால் நகரமே பேரழிவை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் மழை மற்றும் வெள்ளத்தால் பிரிட்டிஷ் கொலம்பியா நிலை குலைந்துள்ளது.
#World