எகிப்தில் ஃபாரோ மன்னனின் 6 சூரியக் கோயில்கள் இருக்கின்றன என நம்பப்படுகின்றது. இந்த நிலையில் 3வது சூரியக் கோயிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்பொருள் பகுதியான அபுசிருக்கு வடக்கே உள்ள அபு கோராப் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோயில் அரசர்களுக்கும் கடவுள் அந்தஸ்தைக் கொடுப்பதற்காக கட்டப்பட்டவை என்று
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 50 ஆண்டுகளில்
கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக இது கருதப்படுகின்றது.
கிமு 25ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்வோன் நியுசெர் இனியால் என்ற மன்னரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
#World