தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் நகரத்தில், பழமையான 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் மறதி காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என தைவான் பொலிஸ் அதிகாரிகள் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் தூபம் போட்ட நிலையில் தூபம் முழுவதுமாக அணைந்துவிட்டதா என்பதை அவர் உறுதிப்படுத்தாத நிலையில் அங்கு தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இதில் தீக்கிரையான 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தீ விபத்துக்கு காரணமான குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல தசாப்தங்களுக்கு பின்னர் தைவானின் மிக மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
#World