உலகையே வியக்க வைத்த பிரான்ஸின் தேசிய தினம்.

 

பிரான்ஸின் தேசிய தினமான Bastille Day நேற்றைய தினம் பரிஸில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதில், முக்கிய நிகழ்வாக, உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பின்னணியில் பிரம்மாண்டமான வாணவேடிக்கை காட்சி இடம்பெற்றது.
இரவு வானத்தை ஜொலிக்க வைத்த இந்த நிகழ்வு பார்வையாளர்களை கொள்ளை கொண்டது எனலாம்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, 1,600 ஆளில்லா வானூர்திகள் பரிஸின் இரவு வானில் பறக்கவிடப்பட்டு, வண்ணமயமான ஒளிக்காட்சிகளை உருவாக்கி கண்கொள்ளாக் காட்சியை வழங்கின.
பிரான்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க Bastille Day ஐ முன்னிட்டு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவைக் காண உள்ளூர் மக்களுடன் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு குழுமி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version