யொஹானியின் பாடல்களை ரசித்த ஜனாதிபதி (வீடியோ)

yohani 720x375 1

மெனிக்கே மகே ஹித்தே பாடல் மூலம் பிரபலமடைந்துள்ள பாடகி யொஹானியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேரில் சந்தித்து அவரது பாடல்களை கேட்டு ரசித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மனைவியும் இணைந்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதிக்கு யொஹானி சில பாடல்களை பாடியுள்ளார்.

மெனிக்கே மகே ஹித்தே பாடல் மூலம் புகழ் பெற்ற யொஹானி இந்தியாவுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு நாடு திரும்பிய பின்னர், ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை சந்தித்துள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

#SrilankaNews

Exit mobile version