உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டும், நீதிகோரியும் ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சகல மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் துணை ஆயர்களின் பங்குபற்றலுடன் விசேட செபவழிபாடு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 1000 நாட்களாகின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இது தொடர்பிலும் நாட்டு மக்கள் தற்போது
எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான விசேட
செப வழிபாடொன்றை நடத்த இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்திருந்தது.
இதற்கமைவாக நாளை 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவிலுள்ள இலங்கை மாதா கெபியிலிருந்து பசிலிக்கா தேசிய ஆலயம்வரை ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மக்கள் அனைவரும் செபமலை மற்றும் செபங்கள் உச்சரித்து பவனி செல்வார்கள்.
அதன்பின்னர் பேராயர் தலைமையில் செப வழிபாடுகள் இடம்பெறும்.
#srilankanews