ஜனனி – ADK மோதல் – ஆடிப்போன ஜனனி

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது என்பதும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் வகையில் புரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ஜனனி பேசிய ஒரே ஒரு வார்த்தை, சக போட்டியாளரான ஏடிகேவை டென்ஷனாக வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 11 10 at 12.12.28 AM

இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில், ‘இந்த வீட்டில் நல்லவர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் நபர் யார்? என்று பிக்பாஸ் கேள்வி கேட்கிறார். அதற்கு ஜனனி, ‘ஏடிகே’ என்று கூறுகிறார். இதைக்கேட்ட டென்ஷன் ஆன ஏடிகே, ஜனனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில், ‘உங்களுடன் பேசுவதற்கு எதுவும் எதுவும் இல்லை என்று ஏடிகே கூற அதற்கு ஜனனி, ‘உங்ககிட்ட பேச எதுவும் இல்லை என்று நீங்கள் சொல்ல தேவை இல்லை’ என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் ஏடிகே, ‘ஜனனியை நான் அவ்வப்போது அழைத்து அட்வைஸ் பண்ணுவேன். அவர் மீது நான் ஒரு மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறேன். அந்த அன்பை கொச்சைப் படுத்திவிட்டீர்கள். நான் அவரை ஒரு தங்கச்சி மாதிரி பழகி வந்தேன். இந்த வீட்டில் உள்ள யார் மீதும் அவ்வளவு அன்பு நான் வைத்தது இல்லை, அந்த புள்ளைமீது நான் அவ்வளவு பாசம் வைத்துள்ளேன், அப்படிப்பட்ட என்னை நல்லவன் என்று முகமூடி அணிந்து இருப்பதாக கூறி விட்டாரே’ என ஆவேசமாக பேசினார்.

இதை பார்த்து ஜனனி ஒரு நிமிடம் ஆடி போயுள்ளார். இதனை அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

#BiggBoss

Exit mobile version