தனுஷ் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷின் ஜோடி

Samyuktha

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ்.

தனுஷின் அசத்தலான நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி, இப்படத்தினை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் பரவி வரும் நிலையில். அவர் படத்தில் விலகவில்லை எனவும்,  படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவர் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சம்யுக்தா மேனன், அவரின் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்

அதில் குறிப்பிடத்தக்க விடயமாக வாத்தி படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எனவும் குறிப்பிட்டுள்ளார் நடிகை சம்யுக்தா மேனன்.

#CinemaNews

Exit mobile version