நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுல நடிகரான புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
46 வயதாகும் நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#CinemaNews,

