பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியின் 6 வது சீசனுக்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அனேகமாக அக்டோபர் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரவி வருகிறது.
அந்த வகையில் விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 6ல் ராஜலட்சுமியை போட்டியாளராக களம் இருக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ராஜலட்சுமி கலந்து கொள்ளவுள்ளாரா இல்லையா என்பது குறித்து தகவல் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
#biggboss #cinema #rajalaxmi
Leave a comment