பிக்பாஸ் – சீக்ரெட் ரூமில் தனலட்சுமி!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது என்பதும், இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பதை கிட்டத்தட்ட பார்வையாளர்கள் யூகித்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த சீசனில் விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவருக்கு டைட்டில் பட்டம் கிடைக்கும் என்றும் அதில் விக்ரமனுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட தனலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பதிவையும் செய்யாமல் இருப்பதால் அவர் உண்மையில் எலிமினேட் செய்யப்பட்டாரா அல்லது சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகம் தற்போது கிளம்பி உள்ளது.

dhana

அதற்கேற்றார்போல் ஹாட்ஸ்டார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சில தொழில்நுட்ப காரணமாக தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பு முடியவில்லை என்றும் தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் சீக்ரெட் அறையில் வைத்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தனலட்சுமி சீக்ரெட் அறையில் ஒருவேளை வைக்கப்பட்டு இருந்தால் எந்த நேரமும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனலட்சுமி கடந்த 76 நாட்களாக ஒருசில முரண்பாடுகளுடன் இருந்தாலும் சரியாக தான் விளையாடி வந்தார் என்பதும் அவர் வெளியேற்றப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீண்டும் தனலட்சுமி வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

#BB #BiggBoss

Exit mobile version