273609192 7119973721408224 7303748407839028097 n
காணொலிகள்சினிமாசினிமாசெய்திகள்

செம குத்தாக வெளியான பீஸ்ட் அரபிக் குத்து…

Share

அட்டகாசமான பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் அரபிக்குத்து பாடலை சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டுள்ளது. செம மாஸ் குத்தாக வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், கிங்ஸ்லே உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார்.

273428721 4861029243935535 7324005657211834999 n
இந்நிலையில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல், காதலர் தின ட்ரீட்டாக பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ப்ரோமோ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் இருப்பது போலவும், விஜய் போனில் பேசுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.

சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடலை விஜய் பாட உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அரபிக்குத்து பாடலை அனிருத் தான் பாடி உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை பாடிய ஜோடிக் காந்தி பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் ArabicKuthuFromToday என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இதில் விஜய் ரசிகர்கள், Today Valentine’s day என்பதை அடித்து விட்டு, ArabicKuthu day என அதிக அளவில் பகிர்ந்தனர். விஜய்யின் மாஸ்டர் பட ஃபஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஆனால் அதை மிஞ்சும் அளவிற்கு அரபிக்குத்து வேற லெவலில் இருக்கும் என கூறப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...

17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...