உப்புத்தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

16 23

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்றுடன் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உப்புக்கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் உப்பு இன்றைய தினம் கிடைக்கப்பெறும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து முதற்கட்டமாக 2800 மெட்ரிக் தொன் உப்பு தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கடந்த 21ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட குறித்த உப்பு கப்பலானது, பல்வேறு காரணிகளால் தாமதமாகி இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனையடுத்து நாட்டில் தற்போதைக்கு நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Exit mobile version