இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

images

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ‘ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்’ மற்றும் ‘ரீ லைஃப்’ ஆகிய மூன்று மருந்துகளிலும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதிகப்படியான டைஎத்திலீன் கிளைகால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ‘கோல்ட்ரிஃப்’ மருந்தை உட்கொண்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், இவற்றை எந்த நாட்டிலும் கண்டறிந்தால் WHO-வுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version