14 7
ஏனையவை

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் அதிரடி பேச்சு

Share

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் களமிறங்கிய நிலையில், முதல் வாரம் முடிவதற்குள், நந்தினி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

இதன்பின் எலிமினேஷன் இருக்காது என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி முதல் வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 9ன் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என தமிழக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் (தவாக) தலைவருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது: “பிக் பாஸ், சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கிறது. இவை எதுவும் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. குறிப்பாக தமிழக குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய விழுமியங்களை அழிக்கும் இந்த நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
16 7
ஏனையவை

நடிகை பூஜா ஹெக்டே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தரியா.. அடேங்கப்பா!!

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்திய சினிமாவில் தனக்கென்று...

1 9
ஏனையவை

ஸ்டாலினின் அரசியல் நாடகம்.. கச்சத்தீவு ஒரு சாக்கு.. அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன்...

3 9
ஏனையவை

திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில் வந்து போகும் நாமல், மகிந்த

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி ராஜபக்சர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

5
ஏனையவை

கரூர் சம்பவம்.. இரவுக்குள் கைது? விஜய்க்கு வந்த சிக்கல்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மற்றும் கரூருக்கு சென்று...