MediaFile 1 3
ஏனையவை

உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா! – போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது தொடர் தாக்குதல்!

Share

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும்.

சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
1500x900 44074091 untitled 5
ஏனையவை

தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த தகவல

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையேயான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire Agreement),...

25 68fafef15f686
ஏனையவை

இந்தியாவே எதிர்பார்க்கும் பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ திரைப்படம்: வெளியானது டீசர்!

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ஸ்பிரிட். மேலும் இது பிரபாஸின்...

09 A corruption
ஏனையவை

போதைப்பொருள் சோதனை போல நடித்து கொள்ளை: கேகாலையில் 40 பவுன் தங்கம் திருட்டு – 5 பேர் கைது!

நாடு முழுவதும் போதைப்பொருள் சோதனையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனை கொள்ளையர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்...

25 68f5bb1f9b4cc
ஏனையவை

மாகாண சபை தேர்தல் முறை பற்றி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்:நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர்...