இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்” என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவும் உதவியளிக்கத் தயாராக உள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு தெளிவான பயங்கரவாதத் தாக்குதல் என்பதைச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் இந்தியா மிக அவ_தானமாகவும் திறமையாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா தனது உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10ஆம் திகதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதன்போது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.