23 3
ஏனையவை

66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

Share

66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

கொழும்பு (Colombo) – கஹதுடுவ (Kahathuduwa), சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஹதுடுவ காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண் 42 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும், இருவரும் சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபரான பெண் சிங்கப்பூர் (Singapore), ஹொங்கொங் (Hong Kong), டுபாய் (Dubai) மற்றும் ருமேனியா (Romania) ஆகிய நாடுகளில் பணியாற்றிய பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்து சந்தேக நபருடன் இந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை வருடங்களாக குறித்த இருவரும் பல்வேறு நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, ராஜகிரிய பிரதேசத்தில் வீதிகளில் தங்கியிருந்து அந்த நபர்களின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர், முகவர் நிறுவனங்கள் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்து, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பதாக கூறி, குறித்த நபர்களிடம் இருந்து 02 முதல் 03 இலட்சம் ரூபா வரை பணம் பெற்று, அந்த கடவுச்சீட்டுக்களை தம்மிடம் வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டது.

இதேவேளை சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, ​​20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...