Medam
தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். உங்க வீடு தேடி இனிய செய்திகள் வந்து சேரும்.
தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும்.
Edapam
பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்சாகமாக வேலை செய்வீர்கள்.
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் கிழ்ச்சி ஏற்படும்.
Mithunam
இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.
நண்பர்களால் மன நிம்மதி கிடைக்கும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
Kadakam
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.
எதற்காகவும் வண்டி வாகனத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.
எதிலும் கவனம் தேவை. வீண் பேச்சு பேச வேண்டாம்.
Simmam
இன்று உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சந்திரன், குரு, சூரியன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் புதிய உறவுகள் தேடி வரும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
Kanni
மந்தநிலையில் இருப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.
வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கடன் பிரச்சினை தீரும்.
Thulaam
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். இன்று பிள்ளைகளால் சுப விரைய செலவுகள் ஏற்படலாம்.
Viruchchikam
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம்.
கவனமாக பேசவும். வீடு வாகனங்களை பராமரிப்பு செய்ய ஏற்ற நாள். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
சொத்து சேர்க்கை உண்டாகும்.
Thanusu
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும். இன்று பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும்.
மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும்.
பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
Magaram
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று பணவரவு நன்றாக இருக்கும்.
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம்.
உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
Kumbam
திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். நண்பர்களுடனான பேச்சு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
இன்று உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
Meenam
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். கூடவே விரைய செலவுகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திருமண சுப காரிய பேச்சுக்களை தொடங்க அனுகூலமான நாளாகும்.
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் பண வருமானம் வரும்.
.#Astrology