ஏனையவை

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல

நாட்டில் தினசரி நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்றுமுதல் (14.02.2025) நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்றும் மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுரைச்சோலையின் (Lakvijaya Power Plant) நிலைமையைக் கருத்தில் கொண்டு, மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா, இல்லையா என்கின்ற முடிவு எடுக்கப்படும் என நேற்றைய தினம் (13.02.2025) அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.02.2025), நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.

இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும், 12ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் மின்வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
5 20
ஏனையவை

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் விடுவிப்பு

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம்...

1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....