tamilni 89 scaled
ஏனையவை

இலங்கையர்களிடம் ஐ.நா சபை கோரிக்கை

Share

இலங்கையர்களிடம் ஐ.நா சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் வலியுறுத்துகிறது.

சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி சேவைகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அமைப்பின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி மோசடியான மற்றும் தவறான தகவல்கள் மீண்டும் பரப்பப்படுவதை அவதானித்ததாக அமைப்பு அறிவித்துள்ளது.

எனவே, தங்கள் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பணத்தைப் பெறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளமையினால் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கெள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தனது ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்தவொரு கட்டத்திலும் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் சீட்டிழுப்பு அல்லது பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...

ice drug arrested
ஏனையவை

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முடக்கம்: பெண் கைது; ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணம் பறிமுதல்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை நிலையமாகச் செயற்பட்டு வந்த வீடு ஒன்றை ஏறாவூர்...