2 54
ஏனையவை

தங்கத்தின் விலைக்கு நிகரான உலகின் விலையுயர்ந்த உப்பு

Share

தங்கத்தின் விலைக்கு நிகரான உலகின் விலையுயர்ந்த உப்பு

மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக உப்பு இருக்கின்றது. சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும், ஆனால் உப்பு இன்றி வாழ முடியாது.

உலகின் அனைத்து சமையலறைகளிலும் கட்டாயமாக இருக்கின்ற பொருளான உப்பு ஒரு உணவின் சுவையை முழுமையாக்குகின்றது.

பெரும்பாலான நாடுகளில் வழக்கமான உப்பு மலிவான விலையில் கிடைத்தாலும், நம்பமுடியாத விலையில் விற்கப்படும் சில அரிய வகை உப்புகள் உள்ளமை நாம் நாம் அறியாத ஒன்றாகும்.

அவ்வாறான ஒரு விலையுயர்ந்த மசாலாப் பொருள்தான் கொரிய மூங்கில் உப்பு (Korean bamboo salt). மூங்கில் உப்பு, ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜுகியோம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த உப்பின் விலை ஒரு கிலோ 400 அமெரிக்க டொலராகும்.

கொரிய மூங்கில் உப்பு உலகின் மிக விலையுயர்ந்த உப்பாகக் கருதப்படுகிறது, இது கொரிய உணவு வகைகளை சமைப்பதிலும், பாரம்பரிய கொரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் கொரிய மூங்கில் உப்பு ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது, இதில் அப்படி என்ன சிறப்பு, இதற்கான பதில், இந்த உப்பு தயாரிக்கப்படும் விதத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதாவது கடல் உப்பை ஒரு தடிப்பான மூங்கில் தண்டில் அடைத்து, பைன் விறகுகளைப் பயன்படுத்தி அதிக வெப்பநிலையில் ஒன்பது முறை சுடுவதை உள்ளடக்கிய மிகவும் சிக்கலான செயல்முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

கொரிய மூங்கில் உப்பு தயாரிப்பதற்கு ஒரு சிக்கலான உற்பத்தி முறை தேவைப்படுகிறது. வழக்கமான கடல் உப்பு மூங்கில் குழாய்களில் அடைக்கப்பட்டு மஞ்சள் களிமண்ணால் மூடப்பட்டு, கலவை இரும்பு அடுப்பில் சூடேற்றப்பட்டு பைன் மர நெருப்பில் வறுக்கப்படுகிறது.

சூடேற்றப்பட்ட பிறகு உப்பு கட்டிகள் கெட்டியானதும், அவை வெளியே எடுக்கப்பட்டு, மற்றொரு மூங்கில் தண்டில் நிரப்பப்பட்டு, மீண்டும் சூடேற்றப்படுகின்றன.

இந்த செயல்முறை ஒன்பது முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது, ஒன்பதாவது முறை சூடேற்றும் போது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பயன்படுத்தப்படுகிறது.

செயல்முறை முடிந்ததும், மூங்கில் உப்பில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு படிகங்கள் காணப்படும், இந்த நிலையில் இந்த உப்பு காம்ரோஜங் சுவை எனப்படும் தனித்துவமான இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது, ஏனெனில் உப்பு மூங்கிலின் சுவையை இந்த செயற்பாட்டின் போது உறிஞ்சுகிறது.

“ஊதா மூங்கில் உப்பு” என்று அழைக்கப்படும் நன்கு சூடேற்றப்பட்ட மூங்கில் உப்பு, ஒரு தனித்துவமான ஊதா நிறத்தைக் கொண்டுள்ளது. இது 1,500 செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலையில் தயாரிக்கப்படுகிறது.

இந்த உப்பை தயாரிக்கும் முழுமையான செயன்முறையும் மிகவும் உழைப்பு மிகுந்ததாகவும், அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் வகையிலும் உள்ளது, இந்த செயல்பாட்டை முடிக்க கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேல் ஆகும்.

மேலும் திறமையான கைவினைஞர்கள் உப்பை சூடேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு உலைகளை இயக்க வேண்டும். இவ்வளவு உழைப்பும், தனித்துவமும் இருப்பதால்தான் இந்த உப்பின் விலை தங்கத்திற்கு இணையாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...