பரபரப்பை கிளப்பிய பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் விவாகரத்து
அமெரிக்க பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸை விவகாரத்து செய்வதை அவரது கணவர் சாம் அஸ்காரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாப் இசையுலகில் பிரபலமான பிரிட்னி ஸ்பியர்ஸ், ஈரானிய-அமெரிக்க நடிகரும் உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருமான சாம் அஸ்காரியை 2016ஆம் ஆண்டு சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஜோடி 2021ஆம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு சூன் மாதம் சாம் அஸ்காரியை திருமணம் செய்துகொண்டார் பிரிட்னி.
இந்த நிலையில் தான் சமீபத்தில் பிரிட்னி அவரது கணவர் சாம் அஸ்காரியை பிரிந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவின.
தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாம் அஸ்காரியே சமூக வலைதளப் பக்கத்தில் தங்கள் விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில், ‘ஆறு ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் அர்ப்பணிப்புக்குப் பிறகு, நானும் என் மனைவியும் எங்கள் பயணத்தை ஒன்றாக முடிக்க முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் நாங்கள் கடைபிடிப்போம். அவருக்கு எப்போதும் நான் சிறந்தவராக இருக்க விரும்புகிறேன்.
மோசமான விடயங்கள் நடக்கின்றன. தனிப்பட்ட உரிமையை கோருவது கேலிக்குரியதாக தெரிகிறது. எனவே ஊடகங்கள் உட்பட அனைவரையும் பொறுப்புடன் இருக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Leave a comment