ஹாலிவுட் வெப் தொடரில் கமிட்டான 52 வயது அஜித் பட நடிகை .. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

24 664310264fa67

ஹாலிவுட் வெப் தொடரில் கமிட்டான 52 வயது அஜித் பட நடிகை .. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

இந்திய சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா, தனுஷ், ஆலியா பட், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் 52 வயதில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை தபு, ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை தபு, ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வரும் Dune: Prophecy எனும் வெப் தொடரில் தான் நடிக்கவுள்ளாராம். இந்த வெப் தொடரில் Travis Fimmel, Emily Watson போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இந்த வெப் தொடரில் நடிகை தபு நடிக்கவிருப்பது மிகமுக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. தபு தமிழில் அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்துள்ளார். மேலும் காதல் தேசம், இருவர் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version