1 6 scaled
இலங்கைஏனையவைசெய்திகள்

கனடாவை உலுக்கிய படுகொலை: இறுதிக்கிரிகைகள் தொடர்பில் தகவல்

Share

கனடாவை உலுக்கிய படுகொலை: இறுதிக்கிரிகைகள் தொடர்பில் தகவல்

கனடாவில் உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகளும் அந்நாட்டிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டடிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த ஆறு பேரின் இறுதிக்கிரியைகளையும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

குறித்த தகவலை கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரியவருகையில், உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகளும் அந்நாட்டிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டடிருப்பதாக விகாராதிபதி நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அவர்களது குடும்பத்தாரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நுகேகலயாகே ஜினாநந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்து வருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகள் காரணமாக இதுவரையில் சடலங்களை கனேடிய பொலிஸார் உரிய தரப்பினரிடம் கையளிக்வில்லை.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...