5 7 scaled
இந்தியாஏனையவைசெய்திகள்

இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- தமிழக அரசு

Share

இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- தமிழக அரசு

தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு முன்வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை திமுக அமல்படுத்தியது.

அதன்படி கடந்த செப்டம்பர் 15-ம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற மேலும் பல லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர்.

அதன்படி, மேல்முறையீடு செய்துள்ளவர்களில் சில லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 19,487 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

பிப்ரவரி அல்லது மார்ச் முதல், முகாம்களில் வசிக்கும் குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...