24 667c15c0a92e6
ஏனையவை

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

Share

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

“இந்த நடவடிக்கை நாட்டின் நிதி சவால்களை நிர்வகிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதன் கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு முக்கியமான படியாகும்” என மேலும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கையானது ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் கழக கூட்டத்தின் போது கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...