மாகாண சபை தேர்தல் முறை பற்றி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்:நாமல் ராஜபக்ச

25 68f5bb1f9b4cc

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே, தேர்தலில் போட்டியிடும் முறை மற்றும் வழிமுறை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும்போது, வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழ் பெறப்படும் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். குறிப்பாக, அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்பினர் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version