அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

tamilni 48

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தனித்தனியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முறையான முறைமை பின்பற்றப்படுவதாகவும் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் காலங்கள் வரும்போது கோரிக்கையை வென்றெடுக்கும் சூழல் உருவாகும் என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஒரு குழுவினர் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயல்வதாக கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.

சுமார் நான்கு வருடங்களாக தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தையே அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இதன் காரணமாக அரசாங்க ஊழியர்களின் தொழில் வாழ்க்கையில் நியாயமான பிரச்சினைகள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version