Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

Share

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.

புதிய கட்டண விபரங்கள்:

  • 0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 15 ரூபாவால் உயர்வு).

  • 31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 45 ரூபாவால் உயர்வு).

  • 61 – 180 அலகுகள்: சராசரியாக 6.9% முதல் 7.2% வரை அதிகரிப்பு.

  • 180 அலகுகளுக்கு மேல்: அதிகபட்சமாக 25% கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த 13.56% ஒட்டுமொத்த கட்டண அதிகரிப்பு யோசனையானது, எரிபொருள் செலவு மற்றும் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த அலகுகளைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்குப் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...