போனில் வந்த மிரட்டல் விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி, சிக்குவாரா?… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

6 29

போனில் வந்த மிரட்டல் விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி, சிக்குவாரா?… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

நாளுக்கு நாள் சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் மக்களிடம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதனால் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப தொலைக்காட்சி குழுவும் நிறைய புத்தம்புது சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள். அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சமீபத்தில் பரபரப்பான கதைக்களம் நடந்து முடிந்துள்ளது. அதாவது சத்யா பணம் திருடிய விஷயம் விஜயாவிற்கு தெரியவந்து அதனால் பெரிய பிரச்சனை ஏற்பட கடைசியில் பணத்தால் முடிந்துள்ளது.

பார்வதியிடம் நாசுக்காக பேசி விஜயா கேஸ் எப்படி வாபஸ் வாங்கினார் என்பதை தெரிந்து கொள்கிறார் ரோஹினி.

மேலும் ரோஹினி சந்தேகமாக சில விஷயங்கள் கேட்க பார்வதி, விஜயா வாங்கிய ரூ. 2 லட்சம் இதோ பார் நான் தான் வைத்திருக்கிறேன் என பணம் வைத்திருந்த இடத்தை காட்டுகிறார்.

இதோடு எபிசோட் முடிய புரொமோவில், சிட்டி பணம் கேட்டு ரோஹினியை மிரட்டுகிறார். இதனால் ரோஹினி, பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவின் ரூ. 2 லட்சம் பணத்தை திருடுகிறார்.

Exit mobile version