2 26
ஏனையவை

அந்த படத்திற்கு பின் வாய்ப்பே கிடைக்கவில்லை.. ஸ்ருதிஹாசன் போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்

Share

அந்த படத்திற்கு பின் வாய்ப்பே கிடைக்கவில்லை.. ஸ்ருதிஹாசன் போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வருகிறார்.

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் 3 திரைப்படத்திற்கு பின் அவருடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், ” 3 திரைப்படத்தில் நடித்து முடித்த பின் 2 ஆண்டுகள் எந்தவித பட வாய்ப்புகளும் இன்றி நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பின், அந்த படம் ரீ ரிலீஸ் ஆன பிறகு தான் மக்களுக்கு அந்த ஜனனி கேரக்டர் எந்த அளவிற்கு பிடித்தது என்பதை அறிந்து கொண்டேன்.

இருப்பினும் நான் தமிழ் படங்களில் நடிப்பதை விட்டு கொடுக்கமாட்டேன். தற்போது கூட ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இப்போது ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் கூலி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...