அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டொன்றை நடத்தி தப்பியோடியுள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியி இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டில் 16 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 17 வயது சிறுமி என மைக்கேல் ஜி. மெக்கபே ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
சூட்டில் 3 மாணவர்கள் உட்பட ஆசிரியர் ஒருவரும், 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கி சூடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
#WorldNews
Leave a comment