காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

images 5

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று (டிசம்பர் 3) அறிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 ரக விமானம், 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது.

அதன் பின்னர் குறித்த வானூர்தியைத் தேடிப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. குறித்த வானூர்தியைத் தேடும் பணிகள் 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதாக மதிப்பிடப்பட்ட இலக்கு பகுதியில் இந்தத் தேடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அந்த இடம் எது என்பது குறித்த தகவலை மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை.

முன்னதாக, மலேசியப் புலனாய்வாளர்கள் ஆரம்பத்தில் குறித்த வானூர்தி வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டதற்கான சாத்தியக் கூறுகளையும் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version