ஸ்ரீலங்காவில் இரத்த களரி ஏற்பட மதத்தலைவர்கள் தான் காரணம் – சிறிதரன்
இலங்கையில் இரத்த களரி ஏற்படுத்துவதற்கு மதத்தலைவர்கள் காரணம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் வெளியிட்ட கருத்தத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் நேற்று முன்தினம்(18.06.2023), குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும், சிங்கள மக்களுக்குரியதும் என பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன என குறிப்பிட்டிருந்தார். அங்கே தமிழ் பெளத்தர்கள்தான் வாழ்ந்தார்கள் என கடந்த கால வரலாற்றை இவர் முதலான தேரர்கள் படிக்கவேண்டும். தமிழர்கள் பஞ்ச ஈஸ்சரங்களை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்தார்கள்.
மேலும், பிரபாகரனின் கொள்கைகளை தமிழ் கட்சிகள் பின்பற்றுவதாக மேதானந்த எல்லாவல தேரர் குறிப்பிடுகின்றார். இவர் போன்றோர் சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும விணைகளை செய்கின்றனர்.