ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல்

New Project

சிறுமி ஹிசாலினியின் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த 16 வயதுடைய மலையக சிறுமி ஹிசாலினி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version