images 6 1
ஏனையவை

ஜனவரி 5 முதல் மழை அதிகரிக்கும்: வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Share

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஜனவரி 05-ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Share
தொடர்புடையது
images 3 3
ஏனையவை

மீண்டும் ஒரு சிக்கலில் ஷேக் ஹசீனா: ஜனவரி 21-ல் தேசத் துரோக வழக்கின் குற்றச்சாட்டுகள் பதிவு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள புதிய தேசத் துரோக வழக்கில், வரும்...

rain
ஏனையவை

வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பிரதேசம்: ஜனவரி 08 முதல் இலங்கையில் கனமழை எச்சரிக்கை!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது ஒரு...

26 695b72e54f66b
ஏனையவை

வெடுக்குநாறிமலை ஆலயக் காணி மற்றும் பாதையை விடுவிக்க ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம்!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மை மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான ஒரு...

24 66b4401f98a1a 1
ஏனையவை

மீரிகமவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: 56 வயதுப் பெண் கைது – பெருமளவு கோடா மீட்பு!

மீரிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் இரகசியமான முறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த...