tamilni 260 scaled
ஏனையவை

ரஷ்ய ஜனாதிபதி புடின் வகுத்துள்ள கொடூர திட்டம்

Share

மேற்கத்திய நாடுகளை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்திவிடுவார் என்ற அச்சம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது எழுந்துள்ளது.

கசிந்த ராணுவ ஆவணங்களால் விளாடிமிர் புடினின் கொடூர திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளதாகவே கூறப்படுகிறது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி 2025ல் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியத்தை புடின் உருவாக்குவார் என்றும் அப்போது அரை மில்லியன் நேட்டோ மற்றும் ரஷ்ய வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள் என்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிக்கியுள்ள அந்த ஆவணங்களை பிரபல பத்திரிகை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அடுத்த குளிர்காலத்தில் நேட்டோ மீது இருமுனைத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும் அடுத்த கோடைகாலத்தில் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 200,000 வீரர்களை திரட்ட புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் உக்ரைன் மீது வலுவான தாக்குதலை முன்னெடுத்து, ஜூன் மாதம் வெற்றியை பதிவு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கத்திய நாடுகள் மீதான தாக்குதலை புடின் முன்னெடுக்க உள்ளார். இதனிடையே, நேட்டோவின் கிழக்குப் பகுதியில் துருப்புக்கள் மற்றும் ஏவுகணைகளை கட்டமைக்க புடின் திட்டமிடலாம் என்றும், மேற்கு நாடுகளை பகைத்து பால்டிக் நாடுகளை சீர்குலைக்க புடின் முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், நேட்டோ பகுதிக்கும் ரஷ்ய பிராந்தியத்திற்கும் நடுவே உள்ள 60 மைல்கள் நிலப்பரப்பை கைப்பற்ற ரகசிய திட்டங்களையும் புடின் வகுத்து வருவதாக ஜேர்மனியின் ராணுவ உளவுத்துறை நம்புகிறது.

அப்படியாக நடவடிக்கை மேற்கத்திய நாடுகளுக்கும் ம்ரஷ்யாவுக்கும் இடையே போர் வெடிக்க வாய்ப்பாக அமையும் என்றே கூறப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் 200,000 வீரர்களை திரட்டி ராணுவத்தை வலுப்படுத்த புடின் முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து உக்ரைன் மீது எதிர்பார்க்க முடியாத தாக்குதலை முன்னெடுப்பார் என்றும், அதில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவிருந்தும் உக்ரைன் சமாளிக்க முடிமால் திணறும் என்றும், இறுதியில் ஜூன் மாதம் புடின் வெற்றியை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜூலை மாதம் மேற்கு நாடுகள் மீது சைபர் தாக்குதல் தொடங்கி பல முனை தாக்குதலை புடின் முன்னெடுக்க இருக்கிறார். செப்டம்பர் மாதம் பெலாரஸ் நாட்டில் இன்னொரு படையெடுப்புக்கான தயாரிப்புகளை புடின் முன்னெடுக்க உள்ளார்.

தற்போது 50,000 ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் நாட்டில் பயிற்சியில் உள்ளனர். அக்டோபர் மாதம் நேட்டோ நாடுகளுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் Suwalki Gap பகுதியை கைப்பற்ற ரஷ்ய படைகள் களமிறங்கும்.

டிசம்பர் மாதம் திட்டமிட்டே நேட்டோ நாடுகளின் சிறிய தொகுப்பை சீர்குலைப்பதற்காக பால்டிக் நாடுகளில் கொடிய கலவரங்கள் தூண்டப்படும். இச்சம்பவத்தின் போது அமெரிக்காவில் தேர்தல் முடிந்து சில வாரங்கள் ஜனாதிபதி பொறுப்பில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...