நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம் மிகச் சக்திவாய்ந்த மற்றும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரை “பயங்கரவாதக் கழிவு” (Terrorist Scum) எனச் சாடியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்திய கொடூரக் கொலைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் படைகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் “கொடியது” (Deadly) என அவர் விவரித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட துல்லியமான இடம், நேரம் அல்லது ஏற்பட்ட இழப்புகள் குறித்த மேலதிக விபரங்களை ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடவில்லை. இதனால், எந்தெந்த இலக்குகள் அழிக்கப்பட்டன என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவில் இஸ்லாமியக் குழுக்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

