5 62
ஏனையவை

தவறி கூட இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்!

Share

வீட்டில் அழகு தாவரங்கள் வளர்ப்பது அனைவரும் விரும்பும் விடயமாகும்.

ஆனால், இவ்வாறு நாம் வளர்க்கும் தாவரங்கள் நமக்கு நம்மை பயக்குமா இல்லையா என்பது பற்றி பெரும்பாலும் யாரும் அறிவதில்லை.

சில தாவரங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தருவது போல சில தாவரங்கள் துரதிர்ஷ்டத்தை மாத்திரமே வாறி வழங்கும்.

அந்த வகையில் வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் என்ன செடி வளர்க்களாம் வளர்க்க கூடாது என்பது பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

வீட்டின் வாஸ்து சாஸ்திரப்படி துளசி மற்றும் மணி பிளான்ட் ஆகியன செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக் கூடிய தாவரங்களாகும்.

ரோஜா தவிர மற்ற முற் செடிகளை வீட்டில் வைக்கக் கூடாது. சிலர் கண்திருஷ்டி என்று சப்பாத்திக்கல்லி போன்ற செடிகளை வீட்டில் வைப்பாளர்கள். இவைகள் வீட்டில் வைக்கக் கூடாத செடிகளாகும்.

அதேநேரம், சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகள் மற்றும் போன்சாய் மரங்களை வாஸ்து படி வீட்டிற்கு உட்புறம் வைக்கக் கூடாது. இவற்றை வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் அல்லது திறந்த வெளியான இடங்களிலேயே வைக்க வேண்டும்.

புளிய மரம் மற்றும் மருதாணி மரம் தீய சக்திகள் குடியிருக்கும் மரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டிற்கு அருகில் இந்த மரங்களை வைக்கக் கூடாது. இது கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

கருவேல மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு அருகில் கருவேல மரங்கள் இருப்பதும் தீய பலன்களையே ஏற்படுத்தும்.

பருத்தி, பருத்தி பட்டு செடிகள், பனை மரம் ஆகியவற்றையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. வீட்டை சுற்றி இந்த மரங்கள் இருப்பது அல்லது செடிகள் இருப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

அத்துடன், தொட்டிச் செடிகளை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பக்க சுவர்களுக்கு அருகில் வைக்கக் கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது எதிர்மறை சக்தியை வீட்டில் அதிகரிக்க செய்யும் என கூறப்படுகின்றது.

நமது வீடுகளில் அழகு தாவரங்கள் வளர்க்கும் போது நன்மை பயக்கும் தாவரங்களை வளர்ப்பது நமக்கு நன்மை பயக்கும். இன்றே வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தாவரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...