18 14
ஏனையவை

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

Share

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை (Jaffna) மையமாகக் கொண்ட பிரபல ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மட்டக்குளி (Mattakkuliya) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் தொடர்பாக தனி நபர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளிய வீதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூரைச் சேர்ந்த இவர்கள் வடகிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘ஆவா’ கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு ‘ஆவா’ கும்பல் உறுப்பினர்களை அழைத்து வருமாறு டுபாயில் வசிக்கும் நபர் ஒருவரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு கும்பல் உறுப்பினர்களும் டுபாயில் இருந்த நபரை டிக்டொக் மூலம் மிரட்டியதும் தெரியவந்தது. இவர்களது தொலைபேசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​’ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவரையும் பெண் ஒருவர் மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்கள் தாக்கப்பட்டு, டுபாயில் உள்ள நபருக்கு அனுப்புவதற்காக காணொளி படம்பிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...