யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பயன்படுத்துவதற்கான தடை நேற்று (ஜனவரி 01) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில், உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளகப் பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் (Packing) என அனைத்துச் செயல்பாடுகளுக்கும் லஞ்ச் சீற் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை: இந்தத் தடையை மீறிச் செயல்படுபவர்கள் மீது எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்ற இயற்கையான இலைகள். ஈய காகிதம் (Foil Paper) மற்றும் உணவு பொதியிடலுக்காக அங்கீகரிக்கப்பட்ட தரமான கொள்கலன்கள் மாற்றீடுகளைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது:
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் பருத்தித்துறை நகரசபை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவிற்குச் சமூக ஆர்வலர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
