2 1 8
ஏனையவை

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி

Share

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாஸ் படமாக அமைந்தது அமரன் திரைப்படம். சமீபத்தில், வெளியான தமிழ் படங்களிலே அமரன் திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முகுந்த் வரதராஜன் என்ற இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எந்த ஒரு விஷயத்தையும் சேர்க்காமல் உள்ளது உள்ளபடியே படத்தை எடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அமரன் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு முன் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் இன்று காலை மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...